அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
கிளீன் இந்தியா கிரீன் இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும்விழா கோவில்பட்டி அருகே உள்ள காளாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் முனியசாமி தலைமை தாங்கினார்,. உதவி தலைமை ஆசிரியர் செல்லையா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பயிற்சி டிஎஸ்பி சுரேஷ், வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளுவர் மன்றம் துணைத் தலைவர் திருமலைமுத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நட்டினர்.

நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், ஆசிரியர் பாலகணேஷ்,மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பசுமைபடை பொறுப்பாளர் மாரீஸ்வரன் செய்திருந்தார். ஆசிரியை கவிதா நன்றி கூறினார்







