வீட்டுமனைப் பட்டா வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு இந்திரா காலனி, கணேஷ் நகர், துளசிங்க நகர், ராஜகோபால் நகர் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்கள் முறையாக வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் இணைப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர்;
.இப்பகுதி மக்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்துள்ள நிலையில் அதுசம்பந்தமான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார்..

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், தாலுகாக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், துணைச் செயலாளர் அலாவுதீன், நகரப் பொருளாளர் சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர் ரெங்கநாதன், தாலுகாக்குழு உறுப்பினர் மணிகண்டன், உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், “எங்கள் பகுதிக்கு பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்திருந்தனர்.







