பெண்கள் ஆரோக்கியம்,உடற்பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் “பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி குறித்த கட்டுக்கதைகளை உடைத்தல்”என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஆரோக்கியம், சரியான உணவு முறை, பருவகால பராமரிப்பு உடற்பயிற்சியின் அவசியம் உடல் எடை குறைப்பு தொடர்பான தவறான நம்பிக்கைகளை கலைக்கும் வகையில் பிஸியோதரபிஸ்ட் மருத்துவர் செண்பகவல்லி சிறப்புரையாற்றினார்.
பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சரியான விழிப்புணர்வு அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி தலைமை தாங்கினார். ஹெல்த்கேர் கிளப் ஒருங்கிணைப்பாளர் பிரபாதேவி வரவேற்று பேசினார். மருத்துவர் லாவண்யா நன்றி கூறினார்.







