கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன், மாவட்ட புரவலர்
விநாயகா ரமேஷ், முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் முத்துசெல்வம், சீனிவாசன், ரெயில் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சிவராஜா, ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் அருள் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பழனி குமார் அனைவரையும் வரவேற்றார்.

ரெயில் நிலைய வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன..ஏற்கனவே 9 வருடங்களுக்கு முன்பாக ரோட்டரி கிளப் சார்பாக சார்பாக நடப்பட்ட மரங்கள் நன்கு வளர்ந்து சோலையாக காட்சி அளிக்கிறது.
விழாவில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் தாமோதரன் கண்ணன், ,ராஜேந்திரன், ,கோபாலகிருஷ்ணன் மற்றும் ரெயில் நிலைய தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினர்.







