கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம்
அரசு பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் தொடக்க விழா, கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நாடார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜான் கணேஷ், சமூகசேவகர். அமலி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர். ஆர்.செல்வராஜ் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக நகர் மன்ற 22வது வார்டு உறுப்பினர். அ. ஜாஸ்மின் லூர்துமேரி கலந்து கொண்டு வங்கியின் பற்று அட்டைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது,” அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பற்காக தமிழ்நாடு அரசு இந்த சிறப்பான திட்டத்தை மாணவ மாணவிகளுக்காக கொண்டு வந்துள்ளது. இன்று இந்த திட்டத்தின் மூலம் 100 பேர் பயன் பெற்றுள்ளனர் ” என்று குறிப்பிட்டார்,
வணிகவியல்துறை உதவி பேராசிரியர். ஜெயக்குமார் நன்றி கூறினார்,







