யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படம்: கோவில்பட்டி, சாத்தூர் பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது

நடிகை யாஷிகா ஆனந்த், நடிகர் ரத்தன் மௌலி , விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘டாஸ்’ (TOSS). படத்தின் பூஜை கோவில்பட்டியில் நடைபெற்றது.
பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.
படத்தின் பூஜையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்,.எல்.ஏ.கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

படத்தின் இயக்குனர் சகு பாண்டியன் கூறியதாவது:- மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.
யாஷிகா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் இருந்து வந்திருக்கும் தேஜா ஸ்ரீ இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.

கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு 2025 இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.







