கோவில்பட்டி கல்லூரியில் தேசிய சேவை திட்டம் நாள்
கோவில்பட்டி ஜி. வெங்கடசாமி நாயுடு கல்லூரி (தனாட்சி) தேசிய சேவை திட்டத்தின் (NSS-180) சார்பில் ஒழுங்குமுறை நிகழ்ச்சி கல்லூரி ஆடிட்டோரியம் ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். சுப்புலட்சுமி தலைமை தாங்கி பேசினார்.கல்லூரி இயக்குநர் டாக்டர் பி. மகேஷ் குமார் வாழ்த்தி பேசினார்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் என்,.எஸ்.எஸ். திட்ட அதிகாரியும், கல்லூரி வாணிபத் துறைத் தலைவர் மற்றும் உதவி பேராசிரியருமான எஸ். பழனிகுமார் பங்கேற்று பேசினார்,
கல்லூரிச் செயலர், முதல்வர் மற்றும் இயக்குநரின் வழிகாட்டுதலின் கீழ், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய சேவைத் திட்டத் திட்ட அலுவலர் எம் மாரிச்சாமி மற்றும் என்எஸ்எஸ் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.







