சிலப்பதிகாரம் ஒப்புவித்து சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
கோவில்பட்டி அருகே சாத்தூர் வட்டம் ந. சுப்பையாபுரம் , அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வேணி, மற்றும் வீர்ச்செல்வி ஆகியோர் சிலபத்திகாரம் முழுமையும் படித்து மனப்பாடம் செய்து ஒப்புவித்து சாதனை படைத்துள்ளனர்,.
சிலப்பதிகாரம் தந்த இளங்கோ அடிகள் அருளிய 5270 வரிகளையும் சிறிதும் பிசிறு இல்லாமல் அழகிய தமிழில் ஒப்புவித்த மாணவிகள் இருவருக்கும் பயிற்சி அளித்தவர் தமிழ் ஆசிரியர் ராஜசேகர் ஆவார்,
மாணவிகள் இருவருக்கும் பள்ளியில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது, தலைமை ஆசிரியர் முனியப்பன் தலைமை தாங்கினார்.

விழாவில் , மதுரை தமிழ்ச் சங்க நிர்வாகியும், யாதவ கல்லூரியின் முன்னாள் முதல்வருமான ஈ.கி. இராமசாமி, மதுரை தொல்காப்பிய மன்றத்தின் தலைவர் இருளப்பன், சிவகாசி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் சிங்கராஜ், கோவில்பட்டி மகிழ்வோர் மன்ற இயக்குனர் மற்றும் நாடார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேசன், ஊடகவியலாளர்கள் சுரேஷ்குமார், தினகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
சிலப்பதிகாரம் ஒப்புவித்து சாதனை படைத்த மாணவிகள் வேணி , வீரச் செல்வி ஆகியோரை பாராட்டி வாழ்த்தினர். சிலப்பதிகார கதைகளை இருவரும் தெளிவாக கூறியதைக் கண்டு வியந்தனர் அவர்களுக்கு நூல் மற்றும் ரொக்கபரிசு வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சி முடிவில் தமிழ் ஆசிரியர் ராஜசேகர். நன்றி கூறினார்…







