கோவில்பட்டி முத்தையம்மால் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் திட்டங்குளத்தில் உள்ள தொழிற்பேட்டையில் சாய்ராம் மேட்வின் என்ற பெயரில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இன்று காலையில் பணியாளர்கள் வழக்கம்போல பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த பணியாளர்கள் அவசரமாக வெளியேறினர். மேலும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, இதை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் பல லட்சம் ரூபாய் […]
தேசிய கண்தானம் விழிப்புணர்வு இருவார விழாவின் ஒரு பகுதியாக, கோவில்பட்டியில் கண் தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள பயணியர் விடுதியில் தொடங்கி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று ஆர்.சி. சர்ச் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் மீனாட்சி, சர்வேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர், பொன்னுஸ் நேச்சுரல்ஸ் பொன்னுசாமி சிறப்பு அழைப்பாளராக […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சிக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தகவல் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் ஆர். வீரலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி செயலர் பா. மகேந்திரன் தலைமை உரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் மூ. சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர். கே. சீனிவாசனை வேதியியல் துறைத் தலைவர் பா. உமாதேவி அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் சுயநிதிப்பாடப் பிரிவுகளின் இயக்குநர் பி. மகேஷ் குமார் வினாடி வினாப் போட்டியினை நடத்தினார். […]
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் (வயது 31). இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். கோவில்பட்டி ரெயில் நிலையம் பகுதியில் உள்ள ஸ்டாண்டில் இருந்தார், தினமும் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வந்தநிலையில் நேற்று இரவு வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு பகுதிககளில் விசாரித்தனர். ஆனால் எந்த விவரமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை சண்முகா நகர் மயானத்தில் ஆட்டோ டிரைவர் மாரிச் செல்வம் முகம், மூக்கு பகுதியில் அரிவாளால் வெட்டுப்பட்ட ரத்த […]
கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளம் மற்றும் முத்துசாமிபுரம் ஆகிய ஊர்களில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு ’ஆர்ச சேவா கேந்திரா’ என்ற அமைப்பு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஆர்ச சேவா கேந்திரா அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் முன்னாள் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுப்பாராஜு முன்னிலையில் மாணவர்களுக்கான குடிநீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்; செங்கோட்டையன்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கும்,, கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி 5-ந் தேதி மனம் திறந்து பேச உள்ளேன் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார், அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், மேசையில் முன் வைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வணங்கினார். […]
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரோட்டரி கிளப் கோவில்பட்டியில் ரோட்டரி கிளப் சார்பாக வ. உ. சிதம்பரனார் 154வது பிறந்த தினத்தை முன்னிட்டு வ்.உ.சி.திருவருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ரோட்டரி கிளப் தலைவர். ராஜ்குமார் தலைமை தாங்கினார், மாவட்ட உதவி ஆளுநர். பரமேஸ்வரன், முன்னாள் உதவி ஆளுநர் முத்துசெல்வம் முன்னிலை வகித்தனர், ரோட்டரி துணைத் தலைவர் முத்து முருகன், உறுப்பினர்கள், […]
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது, மாணவிகள் ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி மரியாதை செய்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலதாவுக்கு ரோட்டரியின் மதிப்புமிகு தலைமை ஆசிரியர் விருது வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார், ரோட்டரிமாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துச்செல்வம்,ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமைஆசிரியை கிரேனா அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை […]
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். கடந்த 1996-2001ம் ஆண்டு வரை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தார். அந்த காலக்கட்டத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன், […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி தன்னாட்சி சுயநிதிப் பாடப்பிரிவுகளில் தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்புக்கழகத்தின் சார்பாக “எல்ஐசியுடன் ஒரு பிரகாசமான வாழ்க்கையை உருவாக்குதல்” (Building a Bright career with LIC) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தொழில் வழிகாட்டல் வேலைவாய்ப்புக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் .பா. கிருபாகரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் மூ. சுப்புலெட்சுமி அவர்கள் தலைமை உரையாற்றினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா. மகேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எல். ஐ. சி, […]







