தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
கோவில்பட்டி முத்தையம்மால் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் திட்டங்குளத்தில் உள்ள தொழிற்பேட்டையில் சாய்ராம் மேட்வின் என்ற பெயரில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இன்று காலையில் பணியாளர்கள் வழக்கம்போல பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த பணியாளர்கள் அவசரமாக வெளியேறினர்.

மேலும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, இதை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம் மற்றும் மூலப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்







