கோவில்பட்டியில் கண்தானம் விழிப்புணர்வு பேரணி

தேசிய கண்தானம் விழிப்புணர்வு இருவார விழாவின் ஒரு பகுதியாக, கோவில்பட்டியில் கண் தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள பயணியர் விடுதியில் தொடங்கி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று ஆர்.சி. சர்ச் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
பேரணியை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் மீனாட்சி, சர்வேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர், பொன்னுஸ் நேச்சுரல்ஸ் பொன்னுசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார், போலீஸ் துணை சூப்பிர்நாடு ஜெகநாதன், கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் , செயலாளர் பழனி குமார் , மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் , யூனியன் கிளப் வெங்கடேஷ் சென்னகேசவன் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

நேஷனல் எஞ்சினியரிங் கல்லூரி சேர்மன் அருணாசலம், இயக்குனர் சண்முகவேல், கே.ஆர்.குருப் கல்லூரிகளின் முதல்வர்கள் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்
பேரணியில், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவர்கள் பதாதைகள் ஏந்தி, கண் தானத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவிகள், ஓவியங்கள், உள்ளிட்ட செயற்பாடுகளின் மூலம் தகவல்களை பரப்பினர்.
ரோட்டரி சங்கம் முன்னாள் உதவி ஆளுநர் பாபு சீனிவாசன், உறுப்பினர்கள் கண்ணன், பூல் பாண்டியன், குணா
கருப்பசாமி, நடராஜன், நாராயணசாமி மற்றும் கண்தான இயக்கத்தின் ஜெயராஜ், ராஜேந்திரன், சேகர் மற்றும் பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர், ஆர்.சி. சர்ச் பள்ளி வளாகத்தில் நடந்த நிறைவு நிகழ்ச்சியில், கண் தானம் குறித்து மருத்துவர்கள் பேசினர்







