கோவில்பட்டி கல்லூரியில் ஆசிரியர் தின விழா
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சிக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தகவல் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் ஆர். வீரலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி செயலர் பா. மகேந்திரன் தலைமை உரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் மூ. சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர். கே. சீனிவாசனை வேதியியல் துறைத் தலைவர் பா. உமாதேவி அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் சுயநிதிப்பாடப் பிரிவுகளின் இயக்குநர் பி. மகேஷ் குமார் வினாடி வினாப் போட்டியினை நடத்தினார். சி
சிறப்பு விருந்தினர் பகவத்கீதை ஆன்மீகப் பேச்சாளர் சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுநிகழ்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளர் சு.அனுசுயாதேவி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். புள்ளியியல் துறைத் தலைவர் தி.சாரதாதேவி நன்றி கூறினார்.







