ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை; மயானத்தில் பிணமாக கிடந்தார்

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் (வயது 31). இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். கோவில்பட்டி ரெயில் நிலையம் பகுதியில் உள்ள ஸ்டாண்டில் இருந்தார்,
தினமும் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வந்தநிலையில் நேற்று இரவு வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு பகுதிககளில் விசாரித்தனர். ஆனால் எந்த விவரமும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை சண்முகா நகர் மயானத்தில் ஆட்டோ டிரைவர் மாரிச் செல்வம் முகம், மூக்கு பகுதியில் அரிவாளால் வெட்டுப்பட்ட ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தது தெரிய வந்தது,
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிச்செல்வம் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

,மாரிச்செல்வத்தை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கொலை நடந்த இடத்தில் எதவும் தடயங்கள் சிக்குமா என்று சோதனை நடத்தப்பட்டது. கைரேகை தடய நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்..
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







