2 தொடக்க பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளம் மற்றும் முத்துசாமிபுரம் ஆகிய ஊர்களில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு ’ஆர்ச சேவா கேந்திரா’ என்ற அமைப்பு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
ஆர்ச சேவா கேந்திரா அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் முன்னாள் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுப்பாராஜு முன்னிலையில் மாணவர்களுக்கான குடிநீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.







