ஆசிரியைகளுக்கு கிரீடம் சூட்டி மரியாதை செய்த அரசு பள்ளி மாணவிகள்

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது,
மாணவிகள் ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி மரியாதை செய்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலதாவுக்கு ரோட்டரியின் மதிப்புமிகு தலைமை ஆசிரியர் விருது வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார், ரோட்டரிமாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துச்செல்வம்,ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி உதவி தலைமைஆசிரியை கிரேனா அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதாவுக்கு ரோட்டரியின் மதிப்புமிகு தலைமை ஆசிரியர் விருதினை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் வழங்கி பேசினார். விழாவின்போது ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவிகள் கிரீடம் சூட்டி மரியாதை செய்தனர்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், தாமோதரக் கண்ணன்,மணிகண்டன்,பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்.







