கோவில்பட்டியில் வ.உ. சிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழா
ரோட்டரி கிளப் சார்பாக வ. உ. சிதம்பரனார் சிலைக்கு மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரோட்டரி கிளப்
கோவில்பட்டியில் ரோட்டரி கிளப் சார்பாக வ. உ. சிதம்பரனார் 154வது பிறந்த தினத்தை முன்னிட்டு வ்.உ.சி.திருவருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ரோட்டரி கிளப் தலைவர். ராஜ்குமார் தலைமை தாங்கினார், மாவட்ட உதவி ஆளுநர். பரமேஸ்வரன், முன்னாள் உதவி ஆளுநர் முத்துசெல்வம் முன்னிலை வகித்தனர்,
ரோட்டரி துணைத் தலைவர் முத்து முருகன், உறுப்பினர்கள், பூல் பாண்டி ,கண்ணன், ராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளர். செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.
வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி

கோவில்பட்டியில் வசிக்கும் வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி அவரது வீட்டில் வ.உ.சி யின் திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
திரைப்பட தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் முருகானந்தம், டாக்டர் கபிலாஸ் போஸ், மோனிஷா, மாரிச்செல்வம், வழக்கறிஞர்கள் நாகராஜ் பாண்டியன், சுரேஷ் மற்றும் ஜவகர், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி செய்தியாளர்களிடம் பேசுகையில் “நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சியின் வெண்கல திருவுருவ சிலை நிறுவ வேண்டும், மேலும் அவரது பிறந்த நாளை தேசிய வழக்கறிஞர் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம்” என்று கூறினார்.
சைவ வேளாளர் சங்கம்

தூத்துக்குடி சைவ வேளாளர் சங்கம் மற்றும் வ உ சி நற்பணி மன்றம் சார்பாக வ உ சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு இந்து முன்னணி சார்பாக மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.செந்தில் ஆறுமுகம் இந்து முன்னணி ராகவேந்திரா, பலவேசம், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு

கோவில்பட்டியில் வ.உ.சிதம்பரனாரின் 154வது பிறந்தநாளை முன்னிட்டு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகி நல்லையா, மோகன், அன்பரசு, INTUC ராஜசேகரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் துரைராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், ரோட்டரி சங்க துணை ஆளுநர் பரமேஸ்வரன், உலக திருக்குறள் கூட்டமைப்பு முத்துச்செல்வம், HMS வினோபா, பகத்சிங் இரத்ததானக்கழகம் காளிதாஸ், லட்சுமணன், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வக்குமார், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







