“எல்ஐசியுடன் பிரகாசமான வாழ்க்கையை உருவாக்குதல்” கருத்தரங்கம்
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி தன்னாட்சி சுயநிதிப் பாடப்பிரிவுகளில் தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்புக்கழகத்தின் சார்பாக “எல்ஐசியுடன் ஒரு பிரகாசமான வாழ்க்கையை உருவாக்குதல்” (Building a Bright career with LIC) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தொழில் வழிகாட்டல் வேலைவாய்ப்புக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் .பா. கிருபாகரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் மூ. சுப்புலெட்சுமி அவர்கள் தலைமை உரையாற்றினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா. மகேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எல். ஐ. சி, மூத்த கிளை மேலாளர் பி. வைரமுத்து எல் ஐ சி யில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றியும் பெண்களுக்கான மகிளா திட்டம் குறித்த வேலை வாய்ப்பு பற்றியும் எடுத்துரைத்துப் பேசினார்.
கருத்தரங்கம் மூலம் 190 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். முடிவில் மின்னணுவியல் துறைப் பேராசிரியர். ஹ.இராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.







