டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 முதல்நிலை மாதிரி தேர்வு ; தூத்துக்குடியில் 3 நாட்கள் நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 முதல்நிலை தேர்வுகள் –2025 க்கான மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வுகள் 6.09.25, 13.9.25, 20.9.25 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது.
முதல் மாதிரி தேர்வு வருகிற சனிக்கிழமை (6.9.2025) காலை 10மணி முதல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு Question Paper and OMR Sheet வழங்கப்படும்.

புதிதாக தேர்வு எழுத வருபவர்கள் ஆதார் அட்டை நகல், Passport Size Photo, TNPSC Gr-II Application First Page ஆகியவற்றை எடுத்து வரவும்.
இந்த நேரடி மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பித்த போட்டித் தேர்வர்கள் மட்டும் கீழ்க்கண்ட Google படிவத்தை 05.09.2025 மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யவும். .
https://forms.gle/mcxTUpnyE7ih2jTd9
மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை WhatsApp Groups மற்றும் சமூக வலைதளங்களில் பகிரவும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது..







