• October 21, 2026

Month: May 2025

செய்திகள்

ரெயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லையில் உள்ள புனலூர் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ரெயில் நிலையத்திற்கு வந்தனர். குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில், புனலூர்  நிலையத்தை வந்தடைந்த உடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டியில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் […]

தூத்துக்குடி

 போலீஸ் நிலையங்களில் புகார் பதிவு செய்ய மறுத்தால் கடும் நடவடிக்கை; மாவட்ட சூப்பிரண்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் புகார் பதிவு செய்யவில்லை என்று ஏதேனும் புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் சில சம்பவங்கள் காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த சம்பவங்களில் போலீசார் மீது எந்தவித தவறும் இல்லை என்பதும், அந்த சம்பவங்களில் நடந்த உண்மைத் தன்மை குறித்து […]

கோவில்பட்டி

டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் பணி: கோவில்பட்டி புதுரோடு பகுதியில் மின்தடை

கோவில்பட்டி ரெயில்நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரெயில் நிலைய நுழைவு பகுதி புதிதாகஅமைக்கப்படுகிறது. மெயின் ரோட்டில் ஞானமலர் பெட்ரோல் பங்க் அருகே இருந்த பழைய டிரான்ஸ்பார்மர் அகற்றப்பட்டு 50 அடி தூரத்தில் இடமாற்றம் செய்யப்படுகிறது இந்த பணிகள் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் புதுரோடு மற்றும் ரெயில் நிலைய பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை […]

செய்திகள்

சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும்; அமைச்சர் அன்பில் மகேஷ்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் தோல்வி (FAIL) என்ற நடைமுறைக்கு எதிராக பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது. சிபிஎஸ்இ பள்ளிகளில் “நோ ஆல் பாஸ்” தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றோர்கள் போட மறுத்து […]

செய்திகள்

23 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மு.கோட்டூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2002-2003 கல்வியாண்டில் பயின்ற  மாணவ – மாணவிகள் பலர்  23 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள், படித்து முடித்து வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் இவர்கள், தாங்கள் படித்த பள்ளிக்கு குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பள்ளி காலத்தின் போது நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர், மேலும்  பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். பள்ளியின் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில்  சித்திரை திருவிழா 5-ந்தேதி தொடக்கம்; நிகழ்ச்சிகள் முழு

கோவில்பட்டி நாடார் உறவின்முறை  சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 5-ந் தேதி திங்கட்கிழமை தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. மாலை நேரத்தில் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கும். நிகழச்சிகள் முழு விவரம் வருமாறு:- 5.5.2025 1வது நாள் மண்டகப்படிதாரர்:நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள் இரவு 7மணிக்கு வண்ண ஊர்தியில் வெள்ளி சிம்ம வாகனத்தில் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி கடல் பகுதியில் சிக்கிய பழமையான அம்மன் சிலை

தூத்துக்குடி தருவைக்குளம் கடல் பகுதியில்   நேற்று காலை 11 மணி அளவில் கடலுக்குள் அமைக்கப்பட்ட மீன்பிடி தளத்தின் இரண்டாம் குறுக்கு பாதையில் கீழ் பகுதியில் ‘அன்னை’ விசைப்படகு ஊழியர்கள் உந்து விசை காத்தாடி பழுதுபார்த்தல் வகைக்கு கடலில் இறங்கி பணி செய்து கொண்டு இருந்தனர். தங்கள் காலில் வித்தியாசமான முறையில் தட்டுப்பட்டது என்னவென்று கூர்ந்து கவனித்ததில் அது சாமி  சிலை  என்பதை அறிந்து கவனமாக செயல்பட்டு பழு தூக்கி உதவியுடன் சேதாரம் இன்றி கரை சேர்த்தனர். இதுகுறித்து […]

செய்திகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை மாற்றம்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘பெயில்’ (தேர்ச்சி இல்லை) என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால் இந்த முறை அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் மே தின விழா

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அனைத்து பெயிண்டர் மற்றும் ஓவியர்கள் சங்கம் சார்பாக மே தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில்  தென்மண்டல தலைவர் ராமமூர்த்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்,தொடர்ந்து, சங்க உறுப்பினர்களுக்கு நலவாரியம் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.   மாவட்ட தலைவர் மாரிச்சாமி,பொருளாளர் மோகன்,நகரத் தலைவர் மணி,செயலாளர் அந்தோணி பொருளாளர் அந்தோணி ராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

கோவில்பட்டி

அரசு புறம்போக்கு இடத்தில், 5 ஆண்டுக்கு மேல் குடியிருப்போர்  பட்டா பெற விண்ணப்பிக்கலாம்;

மே தினத்தையொட்டி கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இன்று நடந்தது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, கிராம மக்களிடமிருந்து மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:- இனாம் மணியாச்சி முதல் எல்லீஸ் நகர் வரை புதிய தார்ச்சாலை அமைக்க ரூ.34 லட்சம், திருமால் நகரில் தார்ச்சாலை அமைக்க ரூ.73 லட்சம், கண்மாய் கரை சாலை அமைக்க ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]