23 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மு.கோட்டூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2002-2003 கல்வியாண்டில் பயின்ற மாணவ – மாணவிகள் பலர் 23 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள்,
படித்து முடித்து வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் இவர்கள், தாங்கள் படித்த பள்ளிக்கு குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பள்ளி காலத்தின் போது நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்,
மேலும் பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். பள்ளியின் ஒவ்வொரு அரைக்கும் சென்று பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது முன்னாள் ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியின் போது தங்கள் பயின்ற வகுப்பறையில் மீண்டும் மாணவர்களாகவே அமர்ந்து அப்போது தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை மீண்டும் பாடம் எடுக்க வைத்து தங்களது பள்ளி பருவத்திற்கே மீண்டும் சென்று வந்தனர்.

இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களால் இயன்ற பணத்தினை பள்ளியின் அடிப்படை வளர்ச்சிக்காக கல்விச்சீராக தன்னார்வத்துடன் வழங்கினர்.
பின்னர் அனைவரும் தங்களது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களுடன் ஒன்றாக அமர்ந்து விருந்து பரிமாறி உணவருந்தி மனமகிழ்வுடன் அங்கிருந்து பிரியா விடை பெற்று சென்றனர்..


