• May 15, 2025

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிக்கப்படும் விளைபொருட்களுக்கு பொருளீட்டுக் கடன்; ஆட்சியர் இளம்பகவத் தகவல்

 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிக்கப்படும் விளைபொருட்களுக்கு பொருளீட்டுக் கடன்; ஆட்சியர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகள், கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஆட்சியர் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 181.16 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. 

பாபநாசம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 71.528 கனஅடியாகஉள்ளது. நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் அளவு 300 கன அடியாக உள்ளது.  தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 0.47 மெ.டன், உளுந்து 79.079 மெ.டன்,கம்பு 4.332 மெ.டன்,நிலக்கடலை 1.576 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 4068 மெ.டன் யூரியா, 2632 மெ.டன் காம்ப்ளக்ஸ், 1402 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 624 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் மற்றும் SSP 498 மெ.டன் இருப்பில் உள்ளன. நடப்பு மே, 2025 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 800 மெ.டன் யூரியா, 1290 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 350 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் 425 மெ.டன் யூரியா 125 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 450 மெ.டன் காம்ப்ளக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

சேமிப்பு கிடங்கு மற்றும் குளிர்பதனகிடங்குகள் மாவட்டத்தில் உள்ள 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள வேளாண் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் மற்றும் திருவைகுண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வாழை பழுக்க வைக்கும் கூடம் ஆகியவற்றினை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிக்கப்படும் விளைபொருட்களுக்கு பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் குறுகியகால மற்றும் மத்திய கால கடன்கள் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 31.3.2025 வரை ரூ.263.50 கோடிக்கு 22463 விவசாயிகளுக்கு விவசாயபயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 16485 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.194.77 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1.4.2025 முதல் 13.5.2025 வரை ரூ.5.99 கோடிக்கு 324 விவசாயிகளுக்கு விவசாயபயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 238 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.4.42 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது

இவ்வாறு ஆட்சியர் இளம்பகவத்  தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *