தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி பயிற்சி முகாமுக்கு 22 வீரர்கள் தேர்வு


ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் வேலூர் மாவட்ட ஆக்கி சங்கம் சார்பாக வேலூரில் வருகிற 19 முதல் 23ஆம் தேதி வரை மாநில சப் ஜூனியர் சாம்பியன் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆக்கி அணி தேர்வு இன்று வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் நடந்தது

உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் முன்னாள் ராணுவ வீரர் சுரேஷ்குமார் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி துணைச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தேர்வு குழு உறுப்பினர்களாக இருந்தனர்
தேர்வில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 52 வீரர்கள் கலந்து கொண்டனர் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 22 வீரர்களை கோவில்பட்டி U P மெட்ரிக் பள்ளி தாளாளர் பரமசிவம் அறிவித்தார் வீரர்கள் விவரம் வருமாறு :-ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம்: ஜெகதீஷ், செல்வமூகில், சந்தோஷ், முகுந்தன்,

லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாட: ஹரி ஆகாஷ் , நவீன் குமார் , கபிலன், பிரின்ஸ் , கருப்பசாமி, மாதேஷ் குமார், கூசாலிபட்டி அசோக் நினைவு ஆக்கி அணி: நிஷாந்த், மாதவன், பாலவசந்த்,
டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணி: ஈஸ்வர், நிதீஷ் குமார்,
தூத்துக்குடி பிரேவ் வாரியர்ஸ் ஆக்கி அணி: சரவணக்குமார், பிரவீன், பிரதீப் குமார்,
செயின்ட் பால்ஸ் பள்ளி: ஸ்ரீ சக்திவேல்,
வேல்ஸ் வித்யாலயா பள்ளி: ராகுல் பாண்டியன்,
யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அணி: மாரிசெல்வம்,
கோவில்பட்டி ஆக்கி அணி: விஷ்வா ,

பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் நாளை காலை முதல் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடறக்கல்வி ஆசிரியர் சுரேந்திரன், ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணைச் செயலாளர் வேல்முருகன், ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்
