• May 16, 2025

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில்  சித்திரை திருவிழா 5-ந்தேதி தொடக்கம்; நிகழ்ச்சிகள் முழு விவரம்

 கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில்  சித்திரை திருவிழா 5-ந்தேதி தொடக்கம்; நிகழ்ச்சிகள் முழு விவரம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை  சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 5-ந் தேதி

திங்கட்கிழமை தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. மாலை நேரத்தில் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கும். நிகழச்சிகள் முழு விவரம் வருமாறு:-

5.5.2025

1வது நாள் மண்டகப்படிதாரர்:நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள்

இரவு 7மணிக்கு வண்ண ஊர்தியில் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் அம்மன் வீற்றிருந்து சூலாயுதம் ஏந்தி துர்க்கைக் கோலத்தில்” எழுந்தருளி திருவீதி உலா வருதல்,

இரவு 7.25 மணிக்கு பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெறும். நிகழ்த்துபவர் : நாவுக்கரசி சி.தேவி தலைப்பு : “குறை ஒன்றுமில்லை”

இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் “நெல்லை நாட்டாமையின் பாட்டுக்கச்சேரி” நடைபெறும்

6.5.2025

2வது நாள் மண்டகப்படிதாரர்: நாடார் சாக்கு வர்த்தகர்கள், தரகு, தையல் தொழிலாளர்கள்

இரவு 7 மணிக்கு கஜலட்சுமி வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் அம்மன் வீற்றிருந்து திருக்கரத்தில் தாமரையுடன்“திருமகள் வடிவத்தில்” எழுந்தருளி திருவீதி உலா வருதல்.

இரவு 7.25 மணிக்கு பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு,. நிகழ்த்துபவர் : பட்டமன்ற நாவலர் பாமணி. தலைப்பு : “உள்ளத்தை கோவிலாக்குவோம்”

இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில்

நாகர்கோவில் லாலாமுருகன் வழங்கும் ‘மகிழ்ச்சி’ கலைக்குழுவினரின் எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான நடன பல்சுவை நிகழ்ச்சி

7.5.2025

3வது நாள் மண்டகப்படிதாரர்: நாடார் ஜவுளி & ரெடிமேட் கடை உரிமையாளர்கள், தையல் கலைஞர்கள்

இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வருதல்.

இரவு 7.25 மணிக்கு.பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு. நிகழ்த்துபவர் : தமிழ்ச்சோலை கா.காளியப்பன், தலைப்பு : “சர்வம் சக்திமயம்”

இரவு 8. மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் முக்கூடல் ‘ஆனந்த ராகம்’ இன்னிசை குழு நடத்தும் இன்னிசைக் கச்சேரி.

8.5.2025

4வது நாள் மண்டகப்படிதாரர்: நாடார் வெற்றிலை பாக்கு, சில்லரை பலசரக்கு வியாபாரிகள்

இரவு 7 மணிக்கு பாற்கடலில் தோன்றிய அற்புதம் காமதேனு வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் அம்மன் வீற்றிருந்து திருக்கரத்தில் கிளி ஏந்தி “அன்னை மீனாட்சியின்” அற்புதக் கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல்

இரவு 7.25 மணிக்கு பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு. நிகழ்த்துபவர்: அனுசுயா மனோகரன் , தலைப்பு : “வான்கலந்த மாணிக்கவாசகர்

இரவு 8. மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம் தலைப்பு: பக்தியையும், பண்பாட்டையும் வளர்ப்பவர்கள் ஆண்களா? பெண்களா? நடுவர் :நாகர்கோவில்மலர்விழி

9.5.2025

5வது நாள் மண்டகப்படிதாரர்: நாடார் கசாய் வர்த்தகர்கள்

இரவு 7 மணிக்கு அலங்கார ஊர்தியில் காளை வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் அம்மன் வீற்றிருந்து திருக்கரத்தில் புல்லாங்குழல் ஏந்தி “கண்ணன் இவன்தானோ”

என எண்ணவைக்கும் கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல், இரவு 7.25 மணிக்கு.பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு. நிகழ்த்துபவர்:.இராம.பூதத்தான் ,தலைப்பு : “ஆலயம் தொழுவது சாலவும் நன்று’

இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் மார்த்தாண்டம் சசிகுட்டன் வழங்கும் “கீதாஞ்சலி” குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி.

10.5.2025

6வது நாள் மண்டகப்படிதாரர்:

நாடார் லாரி, பஸ், மினி பஸ், பல்க், ஸ்பேர்பார்ட்ஸ் உரிமையாளர்கள், புரோக்கர்கள், டிரைவர்கள், கிளீனர்கள்

இரவு 7 மணிக்கு வெள்ளிக்குடையின்கீழ் ஐராவதம் வாகனத்தில் அம்மன் ஈட்டி. கேடயம் ஏந்தி வேட்டைக்குப் புறப்படும் ”கொற்றவைக் கோலத்தில்” எழுந்தருளி திருவீதி உலா வருதல்,

இரவு 7.25 மணிக்கு .பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் ஸ்ரீ பாலா நாட்டியபள்ளி வழங்கும் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள்

இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் நெல்லை புகழ் கணேஷ் வழங்கும் “பரணி*இன்னிசைக் குழுவின் இன்னிசைக் கச்சேரி

இரவு 12 மணிக்கு கழுவேற்றம் : அடைக்கலம் காத்தான் மண்டபம் காமராஜர் மணிமண்டபம் முன்பு கழுவேற்ற நிகழ்ச்சி

11.5.2025

7வது நாள் மண்டகப்படிதாரர்: நாடார் வர்த்தக குமாஸ்தாக்கள்

இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் அம்மன் வீற்றிருந்து “அருட்கோலத்தில்” அற்புதக் கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல்

இரவு 7.25 மணிக்கு பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு. நிகழ்த்துபவர்: சூரியன் FM புகழ் விஜி பூர்ணசிங். தலைப்பு : “குலம் காக்கும் குலதெய்வங்கள்” சிவகாசி புகழ் “ சாகர் சங்கீத வித்யாலயா” குழுவினரின் “வீணை கச்சேரி”

இரவு 8. மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் டான்ஸ் மாஸ்டர் விஜய்.வழங்கும் தென்னாடு புகழ் ஸ்டைல் அபிநயா குழுவினரின் இன்னிசைக்கச்சேரி

12.5.2025

8வது நாள் மண்டகப்படிதாரர்: நாடார்மொத்த வியாபாரிகள்.

இரவு 7 மணிக்கு மணம் கமழும் வாசமிகு பல வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சூலாயுதம் ஏந்தி சிறப்பான சிகையலங்காரத்துடன் “ஆதிபராசக்தி” திருக்கோலத்துடன் எழுந்தருளி திருவீதி உலா வருதல்

இரவு 7.25 மணிக்கு.பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு. நிகழ்த்துபவர்: சூரியன் F.M.புகழ் சுப்பிரமணியன் தலைப்பு : “நற்றுணையாவது நமச்சிவாயமே!”

இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் மதுரை ரியாஸ் காதிரி வழங்கும் “ஷான்” இன்னிசைக் குழுவினரின் கலைநிகழ்ச்சி மற்றும் இன்னிசைக் கச்சேரி.

13.5.2025

9வது நாள் மண்டகப்படிதாரர்: கோவில்பட்டி இந்து நாடார்தீப்பெட்டி, குச்சி மற்றும் மூலப்பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கூட்டமைப்பு

காலை 9. மணி: பக்தர்கள் தெற்கு நந்தவனத்திலிருந்து “பால்குடம் எடுத்துவருதல்”

காலை 10. மணி: அம்மனுக்கு “பால் அபிஷேகம். தீபாராதனை”

மாலை 5.மணி: பக்த பெண்மணிகள் “மாவிளக்கு கையில் ஏந்தி நகர்வலம் வருதல்”

மாலை 5.30 மணி: வேண்டுதல் பூச்சட்டிகள், 21 அக்னி சட்டி, 54 அக்னி சட்டி எடுத்து நகர்வலம் வருதல்

இரவு 7 மணிக்கு வண்ண ஊர்தியில் அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின்கீழ் வீற்றிருந்து தங்கக்குடம், வாளி ஏந்தி “தீர்த்தம் எடுக்கும்” திருக்கோலத்துடன் எழுந்தருளி திருவீதி உலா வருதல்

இரவு 8. மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில்

“நெல்லை புகழ் கவிதா ” தொகுத்து வழங்கும் கவிக்குயில் இன்னிசைக்கச்சேரி.

14.5.2025 பொங்கல் விழா

அதிகாலையில்  தெற்கு நந்தவனம் சென்று புனிதநீர் கொண்டுவந்து தகோவில் முன்பு “பொங்கலிடுதல்”

மாலை 3 மணிக்குகோவில் முன்பு  மஞ்சள் நீராட்டு விழா. =

மாலை 6 மணிக்கு முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பல்லக்கில் கோவிலைச் சுற்றி வருதல். ஒளிவிளக்குகளுடன், மேளதாளத்துடன் முளைப்பாரி நந்தவனம் கொண்டு சேர்த்தல்

காட்சி கொடுத்த கண்கண்ட தெய்வம் காளியம்மன் கோவிலில் வழக்கமாக நடைபெறும் இரண்டு கால பூஜைகள். மண்டகப்படிதாரர்களின் ‘சிறப்பு அபிஷேக ஆராதனைகள்’ நடைபெறும். அதிகாலையில்  பொங்கலிடுதல் அம்மனுக்குப் படைத்தல்’ சிறப்பு தீப ஆராதனை நடைபெறும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *