• May 16, 2025

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியீடு: 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி

 எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியீடு:  93.80 சதவீதம் பேர் தேர்ச்சி


தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள். தேர்ச்சி விகிதம் – 93.80 சதவீதம். ஆகும்
தேர்ச்சி பெற்றவர்கள்: 8,17,261 (93.80 சதவீதம்)
மாணவியர் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 4,00.078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட4,14 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்விற்கு வருகை புரியாதவர்கள்: 15,652பேர் ஆகும்



10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.  காலை 9 மணிக்கு வெளியாகி உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக, பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *