கோவில்பட்டியில் சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட, கோவில்பட்டி வட்டார முழு நேர கிளை நூலகமும், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கோவில்பட்டி கிளையும் இணைந்து நடத்திய சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
ஐந்தாம் நாள் அன்று கதை சொல்லுதல் மற்றும் மிக எளிமையான முறையில் வீட்டில் “மைக்ரோகிரின்”வளர்ப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கி குழந்தைகளுக்கான பாடலும், கதையும் சொல்லி விளக்கம் அளித்து கோடை விடுமுறையை மிகவும் பயன் உள்ளதாக மாற்றம் செய்திட கல்வித்துறையின் வழிகாட்டுதல்களை எடுத்து கூறினார்.

தொடர்ந்து “மைக்ரோ கிரீன்ஸ்” கீரைகளின் உற்பத்தி,கீரைகளின் நன்மைகள் பற்றி “மைக்ரோகிரின் வளர்ப்பு” ஆர்வலர் மற்றும் “ஸ்டோரி வீவர்ஸ்” இணையதள சிறார் கதை எழுத்தாளர் ஓய்வு பெற்ற வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்து 7 நாட்களில் நுண் தண்டு கீரை வளர்த்து அறுவடை, செய்தல் பற்றியும்,மற்றும் சிறுவர்களுக்கான ஸ்டோரி வீவர்ஸ் இணைய தளத்தில் கதை எழுதுவது, பல்வேறு மொழிகளின் படக் கதைகள் வாசிப்பது, பாடம் தொடர்பான “ஸ்டெம்” கல்வி முறை சிந்தனையின் நன்மைகள் பற்றி விரிவான விளக்கம் அளித்து பேசினார்.

முகாமில் கலந்து கொண்ட பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகவும் ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். தொடர்ந்து கதை சொல்லி கேள்வி கேட்டு சரியான பதில் சொல்லிய அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
கிளை நூலக 3-ம் நிலை அலுவலர் கலைச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி அலுவலர் கற்பகம் மற்றும் சிதம்பரம் ஆகியோர் செய்திருந்தனர்.

