நாலாட்டின் புதூர் ஊராட்சி சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்; `நிர்ணய் செயலி’யில் பதிவேற்றம்
தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை ஒவ்வொரு நிதி ஆண்டிலும் சமூக தணிக்கை நடைபெற்று சமூக தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாலாட்டின் புதூர் கிராம ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை மே-12ம் தேதி முதல் 16ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர் மணி தலைமையில் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முதலாக நாலாட்டின் புத்தூர் கிராம ஊராட்சியில் நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் வீரம்மாள் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் பாபு,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சீத்தாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ராமசாமி அனைவரையும் வரவேற்றார்.
சமூகத்தணிக்கை மாவட்ட வளஅலுவலர் மணி கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடத்தினார். இதில் சமூகத்தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கபட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிராஜ் கிராம வள பயிற்றுநர்கள் பொன்சித்ரா, அபியா, நித்யா, அய்யம்மாள்.திட்ட ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, பணித்தளப் பொறுப்பாளர்கள் ஜெயலட்சுமி, ஜானகி, மாரியம்மாள், அமுதா உள்பட சமூகதணிக்கை வட்டார வள பயிற்றுநர்கள்,100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வள பயிற்றுநர் பாலமுருகன் நன்றி கூறினார்.








