10- ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாட வாரியாக 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்ச்சி விகிதம்

10- ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. கடந்த மார்ச் / ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு 10- ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8.94.264. தேர்ச்சி பெற்றோர் 8.18,743, தேர்ச்சி சதவிகிதம் 91.55% இவ்வாண்டு தேர்ச்சி 2.25% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.

10- ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,485 இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 7,555 உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை : 4,930.
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 4,917.
-100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,867.
பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி சதவிகிதம்
1. அரசுப் பள்ளிகள் 91.26%
2. அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.63%
3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.99%
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்
1. இருபாலர் பள்ளிகள்-94.06% 2. பெண்கள் பள்ளிகள்-95.36% 3. ஆண்கள் பள்ளிகள்-87.84%

பாட வாரியாக 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்ச்சி விகிதம்
1.தமிழ் 98.09% 8 பேர்
2.ஆங்கிலம் 99.46% 346 பேர்
3. கணிதம் 96.57% 1996 பேர்
4. |அறிவியல் 97.90% 10838 பேர்
5. |சமூக அறிவியல் 98.49% 10256 பேர்

