கோவில்பட்டி புதுக்கிராமத்தில் மே தின விழா

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அனைத்து பெயிண்டர் மற்றும் ஓவியர்கள் சங்கம் சார்பாக மே தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்மண்டல தலைவர் ராமமூர்த்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்,தொடர்ந்து, சங்க உறுப்பினர்களுக்கு நலவாரியம் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மாவட்ட தலைவர் மாரிச்சாமி,பொருளாளர் மோகன்,நகரத் தலைவர் மணி,செயலாளர் அந்தோணி பொருளாளர் அந்தோணி ராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
