• October 21, 2026

Month: May 2025

செய்திகள்

14 மாவட்டங்களில் 23-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டோ, அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் மழை பொழிவுக்கே […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அதிமுக வார்டு செயலாளர்கள் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் கோவில்பட்டி நகர அதிமுக வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமை தாங்கி,ஆலோசனைகளை வழங்கினார். நகரச்செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் செண்பகமூர்த்தி, கவியரசன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி,ஜெ பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன்,ஜெ பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி அம்பிகை பாலன்,முன்னாள் நகர […]

கோவில்பட்டி

4 வது ஆண்டு நினைவு தினம்: கி. ராஜநாராயணன் உருவசிலைக்கு மரியாதை

சாகித்ய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் 4 வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டி எட்டையபுரம் ரோட்டில் உள்ள கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவில்பட்டி கிளை சார்பாக, கிளைச் செயலாளர் சக்தி செல்லப்பா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

செய்திகள்

சாலை விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியை சேர்ந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் நிதியுதவி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் கிராமம் பரணி பார்க் பள்ளியின் கிழக்குப் பக்கம், நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலை, சின்ன வடுகப்பட்டி அருகில் இன்று (17.5.2025) காலை சுமார் 5.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்தை ஏற்படுத்தியது. அந்த  ஆம்னி பேருந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி பின்னர் எதிர் சாலையில் கோவில்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த மேக்ஸி […]

செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நட்பு நாடுகளுக்கு பயணம்: கனிமொழி உள்பட 7 எம்.பி.க்கள்

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய  தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி வீரர்கள் அறிவிப்பு

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் வேலூர் மாவட்ட ஆக்கி சங்கம் ஆகியவை சார்பாக வேலூரில் வருகிற 19 முதல் 23ஆம் தேதி வரை மாநில சப் ஜூனியர் சாம்பியன் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் தூத்துக்குடி , நீலகிரி, செங்கல்பட்டு, நாமக்கல் மாவட்ட அணிகள்   “E” பிரிவில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 32 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன. சிறப்பாக விளையாடும் வீரர்களை […]

கோவில்பட்டி

ராணுவ நடவடிக்கையை ஆதரித்து கோவில்பட்டியில் பாஜகவினர் பேரணி ; தேசியகொடி  ஏந்தி சென்றனர்

காஷ்மீர் பகல்ஹாமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து இந்திய அரசு மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரித்தும் முப்படை வீரர்களின் வீரத்தையும்,தியாகத்தையும் போற்றும் வகையில் கோவில்பட்டியில் (திரங்கா யாத்திரை)தேசிய கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த இந்த பேரணி மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் பகுதியில் இருந்து புறப்பட்டு மெயின் ரோடு,மாதாங்கோவில் ரோடு,எட்டயபுரம் ரோடு வழியாக காந்தி […]

கோவில்பட்டி

வேன் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து; கோவில்பட்டியை சேர்ந்த 5 பேர்

பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி 50 பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் இன்று அதிகாலை புறப்பட்டு வந்தது. 530 மணி அளவில்  கரூர் வெண்ணெய்மலை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதிய பஸ், சாலையின் நடுப்புற  தடுப்புச்சுவரை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது பயங்கரமாக மோதியது, இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. பஸ் மோதியதில் டிராக்டர் இழுத்து செல்லப்பட்டு வேன் மீது மோதியதில் டிராக்டருக்கு அடியில் வேன் சிக்கிக்கொண்டது. வேனில் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிறுவர்களுக்கான கோடை கால சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம் மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தூத்துக்குடி கிளையும் இணைந்து நடத்திய சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் மைய நூலகத்தில் நடைபெற்று வருகிறது.  4-ம் நாள் நிகழ்ச்சியின் துவக்கமாக மாவட்ட மைய  நூலகர் ராம்சங்கர் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தூத்துக்குடி கிளைத் தலைவர் :திருக்குடும்ப மேரி, செயலாளர்: வாலண்டினா, மற்றும் திருச்செந்தூர் கிளைச் செயலாளர்: சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.சி.எ.க.ச.கோவில்பட்டி கிளை தலைவர் […]

செய்திகள்

அமலாக்கத்துறையின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை; அமைச்சர் முத்துசாமி கண்டனம்

வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; “சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது. இந்த சோதனைகளின் போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத […]