தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா (வயது 45). கடந்த 2-ந் தேதி முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நடிகர் ஜி.பி.முத்துவின் மகன்கள், சைக்கிளில் இருபுறமும் சென்றனர். சாலையின் இருபுறமும் ஏன் சைக்கிள் ஓட்டுகிறீர்கள், ஒருபுறமாக ஓட்டுங்கள் என்று முத்து மகேஷ் கூறினாராம். இதுகுறித்து ஜி.பி.முத்துவிடம், அவரது மகன்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜி.பி.முத்து, அவரது மனைவி […]
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026ஐ முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (04.11.2025) பார்வையிட்டார். இது பற்றி ஆட்சியர் இளம்பகவத் கூறியதாவது :- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் இன்று (4.11.2025) முதல் 4.12.2025 வரை நடைபெறவுள்ளது. நமது […]
தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் நீதியரசன் மகன் அருண் (வயது 18), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் விலங்கியல் 2ம் ஆண்டு படித்து வந்தார்.. இவரது நண்பர்கள் ராஜகோபால் நகர் 4வது தெருவை சேர்ந்த சசிகுமார் மகன் கவின் 14, சண்முக சேகர் மகன் ஹரிஷ் 17 ஆகிய 3பேரும் நேற்று மாலை 5.30 மணி அளவில் மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் காட் வேனில் ஏறி ரீல்ஸ் […]
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று கரை திரும்பிய நிலையில், மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. நேற்று விடுமுறை தினத்தையொட்டி மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், ஏலக்கூடத்தில் மீனவர்களிடம் மீன்களை மொத்தமாக வாங்க வியாபாரிகள், மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்து வாங்கிச் சென்றனர். சீலா மீன் கிலோ ரூ.1,000 முதல் 1,300 வரையும், பாறை மீன் […]
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு சங்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- தென் மாவட்டங்களில் தூத்துக்குடி வர்த்தகத்திற்கு மிகவும் புகழ்பெற்ற நகரமாக திகழ்ந்து வருகிறது. தூத்துக்குடியில் துறைமுகம், அனல்மின் நிலையம், பல்வேறு தொழிற்சாலைகள், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், உப்பு ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் இருந்தும் அதிக அளவில் வர்த்தக […]
துத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனத்தின் PMDK பிரதம மந்திரி திவ்வாஷ் கேந்திராமையம் மூலம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் அடையாள அட்டை வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை 18 […]
தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் ஜெயக்குமார் டிரான்ஸ்போர்ட்ஸில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இந்த நிறுவனத்தின் சார்பாக இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ரூ.559 செலுத்தி விபத்து காப்பீடு செய்திருந்தனர். இந்த நிலையில் அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.இதனையடுத்து அவரது வாரிசான அவரது மனைவி ஜெயராணிக்கு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா விபத்து காப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர் […]
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் படையினர் ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புல்லாவெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்துவதற்காக ஒரு லோடு வண்டி வந்துள்ளது. போலீசார் அந்த லோடு வண்டியை நிறுத்த முயன்றபோது, டிரைவர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த வண்டியை விரட்டிச் சென்று தூத்துக்குடி சிப்காட் […]
தூத்துக்குடி.கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்,வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் போலீஸ் கான்ஸ்டபிள் ( TNUSRB PC -2025) தேர்வுக்கு மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி (Offline) மாதிரி தேர்வு வருகிற வெள்ளிக்கிழமை 31.10.2025 காலை 10.மணி முதல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு Question
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் பலர் விரதம் இருக்க தொடங்கினர்.தினமும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வாகன வீதி உலா நடைபெற்று வருகின்றன. கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை […]
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







