தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் திடீர் மாற்றம் ; மதன் நியமனம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் கடந்த டிசம்பர் மாதக் கடைசியில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சிலம்பரசன் நியமனம் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே நெல்லை மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றியவர்.
கடந்த ஜனவரி மாதத்தில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிலம்பரசன் பதவி ஏற்ற நாளிலிருந்து தனது பணியை திறம்பட மேற்கொண்டார்.

ஏற்கனவே பல வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தார்.
இருப்பினும் அவரது பதவிக்காலம் இரண்டு மாதம் கூட முடிவடையாத நிலையில் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் சென்னை நகர சட்டம் ஒழுங்கு போலீஸ் உதவி ஐ. ஜி. யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக மதன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் தற்போது திருநெல்வேலி மேற்கு போலீஸ் துணை கமிஷனராக இருக்கிறார்.







