• March 6, 2026

போட்டித் தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாத நேரடி பயிற்சி வகுப்புகள்; தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது 

 போட்டித் தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாத நேரடி பயிற்சி வகுப்புகள்; தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது 

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் TNPSC, TNURB, RRB, SSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாத நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது ரெயில்வே தேர்வாணையத்தால்  22,195 Group-D பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது. RRB மற்றும் SSC தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற புதன்கிழமை (11.02.2026) காலை 10:30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு Smart Board பயன்படுத்தி நடத்தப்பட உள்ளது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.  இப்போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Forms படிவத்தை (

https://forms.gle/b2aK6zXoh3Y7jwpR6) உடன் பூர்த்தி செய்து Submit செய்யவும். பயிற்சி வகுப்பிற்கு வரும் பொழுது தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்து வரவும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *