பல்வேறு போட்டிகள்:சாத்தூர் கல்லூரிக்கு `சாம்பியன்ஷிப்’ பட்டம்
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தகவல் தொழில் நுட்பவியல் துறை, சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர்.மூ.சுப்புலட்சுமி தலைமையுரை ஆற்றினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர், தாவரவியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் .பா.மகேஷ்குமார் பாராட்டுரை வழங்கினார்.

பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து 133 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகளின் நிறைவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தினை சாத்தூர் ஸ்ரீ.எஸ்.இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி (அரசு உதவி பெறும்) பெற்றது.
தகவல் தொழில் நுட்பவியல் துறைத் தலைவர்.ரா.வீரலட்சுமி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடக்கத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறை மாணவி.ப.ஈஸ்வரி வரவேற்றார். ,முடிவில் ; மாணவி.மு.சாதனாசெல்வி நன்றி கூறினார்,.
பயிற்சிப் பட்டறை

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் இயற்பியல் துறையின் சார்பாக நுண்செயலி 8085 தொடர்பான பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இப்பயிற்சிப் பட்டறையில் இயற்பியல் துறைத்தலைவர் பெ.சித்ரலேகா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர்.எஸ்.ஆர்.பாலாஜி நுண்செயலி 8085 கட்டமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் குறித்தும் உரையாற்றினார்.
பின்னர் மாணவ, மாணவிகளை நுண்செயலி 8085 பயன்படுத்துவது குறித்து ஆய்வகத்தில் நேரிடையாக பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிற கல்லூரி மாணவர்களை சேர்த்து மொத்தமாக 100 மாணவ, மாணவியர்கள் பற்கேற்று பயன்பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் மூன்றாமாண்டு இயற்பியல் துறை மாணவர் கவிப்பிரியன் நன்றி கூறினார்.







