கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி கொலை: 3 பேர் கைது
Oplus_16908288
கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து ராஜ் மகன் கார்த்திக் (வயது 28), கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நள்ளிரவில், கார்த்திக் வீடு அருகே அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன்கள் வேல் முருகன் (33), அய்யாதுரை (28), முத்துசாமி மகன் முனியசாமி (34) ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதனை கார்த்திக், கண்டித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த வேல்முருகன் உள்ளிட்ட 3 பேரும், அருகில் கிடந்த செங்கல்லை

எடுத்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். பலத்த காயமடைந்த
அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். அதன் பிறகு அவர்கள் 3பேரும் தப்பிச் சென்று விட்டனர்.
தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், எஸ்ஐ க்கள் சண்முகம், ராமச்சந்திரன் மற்றும்
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வந்த நிலையில் நேற்று கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக பதுங்கியிருந்த
3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.







