தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுநர்கள் பணியாளர் நல சங்கம் மாவட்டத் தலைவர் பொன்ராஜ் என்பவரை மாநகராட்சி ஒப்பந்ததாரரான அவர்லேண்ட் நிறுவன மேலாளர் முருகேசன் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில செயற்குழு உறுப்பினர் சகாயம், சி.பி.ஐ.எம்.எல் மாவட்ட பொறுப்பாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 40 குப்பை அள்ளும் வாகனங்களுடன் ஒப்பந்ததாரர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த […]
திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வழக்கம் போல் நேற்று பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது,சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் வந்திருந்ததால் திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதியது. நேற்று கார்த்திகை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த மணமக்கள், தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் திருச்செந்தூருக்கு வந்திருந்தனர். கோவில் சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் வளாகங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட […]
தூத்துக்குடி விகாசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து ஒருங்கிணைத்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தின. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு உரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட […]
தமிழக அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:- 2026 ஆம் ஆண்டிற்கான ”கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது தகுதியுடைய நபர்களுக்கு தலா ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/- வீதம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய […]
தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி சுயம்வரம் நடந்தது. இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர். பின்னர் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி 5 ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். தேர்வு செய்த 5 ஜோடிகளுக்கும் இன்று காலை மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் ஒரே மேடையில் திருமணம் […]
மதுரையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வருவதற்காக, நேற்று மதியம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலைய வளாகத்தில் அவர் நடந்து வந்தபோது, தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டு வழியனுப்பினர். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக, சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். […]
பழைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசுப் பணியிடங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பாமல், படித்த இளைஞர்களைக் கொண்டு நிரந்தர ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு தலைமை தாங்கினார். […]
. தூத்துக்குடி ரஹ்மத்துல்லா புரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி அமுதா (வயது 41). என்பவர் கடந்த 27ஆம் தேதி இரவு 9.50 மணியளவில் அங்குள்ள ஒரு கடையில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அமுதா கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டார். மேலும் அன்றைய தினம் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு டெலிபோன் காலனியைச் சேர்ந்த செல்வம் மனைவி கிறிஸ்டி (30) என்பவர் தனது […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலை போடப்பட்டு சுமார் 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த சில வருடங்களாகவே இந்த சாலை குண்டும் குழியுமாக தார் சாலை என தெரியாத அளவிற்கு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நெடுஞ்சாலைத்துறைக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புதியம்புத்தூர் -தூத்துக்குடி சாலை மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது […]
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசினால் ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும். பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் […]
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







