மாணவி கொலை வழக்கில் துப்பு துலக்கிய 25 போலீஸ் அதிகாரிகளுக்கு நற்பணி சான்றிதழ்


விளாத்திகுளம் அருகே பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி குற்றவாளியை கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறப்பாக பணிபுரிந்த 25 போலீஸ் அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பாராட்டு சான்றிதழ் பெற்ற போலீஸ் அதிகாரிகள் விவரம் வருமாறு:-

விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல்,
எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி,
சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு,
புதூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்,
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன்,
முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன்,
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன்,
தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ்,
சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி,

ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திலீபன்,
மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாசன்,
காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர்கள் ராஜபிரபு, மணிமாறன்,
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவிஆய்வாளர் சண்முகம்
விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா,
நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்,
சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெபின் செல்வ பிரிட்டோ,
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார்,
முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புராஜ்,
ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா,
ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன்,
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காவுராஜன்,
சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சுதாகரன், அச்சுதன்,
மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன்
மேற்கண்ட 25 காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் சரவணன் நற்பணிச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.







