மூணாறில் மலையேற்ற பயிற்சி; கோவில்பட்டியை சேர்ந்த 3 பேர் பங்கேற்பு
Oplus_16908288
சர்வதேச வன நாளை முன்னிட்டு கேரளா அரசு வனத்துறை மூணாறில் உள்ள மீசை புலி மலை என்ற 8842 அடி உயரம் உடைய மலை சிகரத்தில் ஏறுவதற்கு அழைப்பு விடுத்திருந்தது.
கேரள மாநிலத்திலிருந்து கலந்து கொண்ட 34 பேர் கொண்ட குழுவில் தமிழகத்திலிருந்து 3 பேர் கலந்து கொண்டனர். வனத்துறையில் முன்பதிவு செய்தவுடன் தேர்வு செய்து அழைத்துச் செல்லும் பயிற்சியாகும்.

இந்தப பயிற்சியில் கோவில்பட்டியை சேர்ந்த கோபி கிருஷ்ணா, நாகஜோதி மற்றும் முன்னாள் திட்ட அலுவலர் சுப்பா ராஜூ ஆகியோர் இந்த மலையேறும் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல், காடுகள் பாதுகாப்பு குறித்த நோக்கமாகக் கொண்ட இந்த விழிப்புணர்வு மலையேற்ற பயிற்சியில் கலந்து கொண்ட குழுவினரை இடுக்கி மாவட்ட வன அலுவலர் பாராட்டினார்.








