• March 14, 2026

திருச்செந்தூரில்                               புத்தக திருவிழா தொடக்கம் 

 திருச்செந்தூரில்                               புத்தக திருவிழா தொடக்கம் 

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு,தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம், திருச்செந்தூர் ஜே.சி.ஐ சார்பில் திருச்செந்தூர் சொர்ணம் மஹாலில்  புத்தக திருவிழாவின் தொடக்க விழா நடந்தது.

புத்தகத் திருவிழாவில் கலை,இலக்கியம்,வாழ்க்கை வரலாறு,நாவல்,அறிவியல்,மருத்துவம்,போட்டித் தேர்வு நூல்கள் உள்ளிட்ட ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.

இன்று மார்ச் 14 ம் தேதி முதல் 25ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் விற்பனையாகும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. பார்வையாளர்களில் தினசரி ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு புத்தகம் பரிசு வழங்கப்படும்.

திருச்செந்தூரில் நடைபெறும் புத்தகத் திருவிழா தொடக்க விழாவிற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென் மண்டல தலைவர் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார்..

சரவனஐயர் நடுநிலைப் 

பள்ளி தாளாளர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் ஷேக் முகமது, அனைத்து சமுதாய மக்கள் நல இயக்க துணைத் தலைவர் வன்னிய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார்.

புத்தக கண்காட்சியினை திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மதுரை வீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டு,சென்னை தொழிலதிபர் மகேந்திர குமார் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

முதல் விற்பனையை ஜே.சி.ஐ தலைவர் சிவா தொடக்கி வைத்திட தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் முரளி சங்கர் பெற்றுக்கொண்டார்.

நகராட்சி துவக்கப் பள்ளி நல்லாசிரியர் சிவகாமி, கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன்,தமிழக ஆசிரியர் கூட்டமைப்பு செயலாளர் செல்வின்,மதன்ராஜ்,வழக்கறிஞர் சாத்ராக், பாரதி புத்தகாலய பொறுப்பாளர் சந்திரசேகர், தூத்துக்குடி வாசிப்பு இயக்க நிர்வாகிகள் ரவி, செந்திலதிபன், முத்துகிருஷ்ணன், ஜெகநாதபெருமாள், புத்தக திருவிழா பொறுப்பாளர்கள் ராஜபாண்டி, ரமேஷ், கார்த்திக்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் குலசேகரபட்டினம் நூலகர் மாதவன் நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *