கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரி பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டம்
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு (ஜிவிஎன்) கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. கல்லூரிச் செயலர் முனைவர் ப.மகேந்திரன் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலட்சுமி மற்றும் சுயநிதிப்பாடப்பிரிவுகள் இயக்குநர் (பொ) பா.மகேஸ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளரும் வேதியியல் துறை இணைப்பேராசிரியையும் ஆன வே.கோமதி சங்கரேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள், கல்லூரியின் சிறப்புகளைப் பற்றியும், உயர்ந்த கல்வித் தரத்தினைப் பற்றியும், மாணவர்களின் முன்னேற்றத்தில் பேராசிரியர்களின் பங்களிப்பினைப் பற்றியும் பாராட்டி கருத்துரை வழங்கினார்கள்.

மேலும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மா.சங்கரேஸ்வரி நன்றி கூறினார்.







