• March 20, 2026

வேடநத்தம் மாணவி கொலை எதிரொலி: ஒவ்வொரு கிராமத்திலும் தலா 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு; போலீஸ் சூப்பிரண்டு மதன் தகவல்

 வேடநத்தம் மாணவி கொலை எதிரொலி: ஒவ்வொரு கிராமத்திலும் தலா 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு; போலீஸ் சூப்பிரண்டு மதன் தகவல்
கைதானவருடன் பெண் போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி 

 கொலை செய்யப்பட்ட வழக்கில், அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் மதன் கூறியதாவது :-

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 4 டி.எஸ்.பி-க்கள், 6 ஆய்வாளர்கள் உட்பட 150 காவலர்கள் கொண்ட 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத போதிலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள 98 இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், 2,514 தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. சுமார் 800-க்கும் மேற்பட்டவர்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்குரிய 461 நபர்களிடம் டிஜிட்டல் மற்றும் நேரடி முறையிலான தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கிராம மக்களிடம் பெறப்பட்ட தகவல்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபரைத் தனிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர். எவ்வித அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ சமூக வலைதளங்களில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இதுவரை அவ்வாறு பயன்படுத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் யாராவது மாணவியின் அடையாளத்தை வெளியிட்டால், அவர்கள் மீது பிரிவு 23-ன் கீழ் (POCSO Act) எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு கிராமத்திலும் தலா 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண் காவலர்கள் மூலம் கிராமங்களில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதது.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மதன் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *