கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பகுதியில் ட்ரோன் மூலம் வீடியோ எடுக்க தடை; செண்டமேளம் வாசிக்கவும் அனுமதி கிடையாது
கோவில்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை காட்டுப்பாட்டில் உள்ள செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கோவில் சுற்றுப் பகுதி முழுவதும் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது கோவில் சுற்றுப் பகுதியில் சமூக வலைத்தளங்களில் வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது மீறினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் கோவில் முன்பு காலணிகளை கழற்ற அனுமதி கிடையாது. காலணியை பாதுகாக்கும் இடத்தில் கழற்றவும். *மேளம், செண்டமேளம் போன்ற வாத்தியங்கள் வாசிக்க அனுமதி கிடையாது. பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டம் கூட்ட அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிவிப்பு சுவரொட்டிகள் கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் கோவில் முன்பு இரண்டு இளம் பெண்கள் குத்துப்பாட்டுக்கு நடனமாடி சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிட்டதை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.







