• March 20, 2026

கோவில்பட்டியில் ‘தேடல்’ புத்தகம் திறனாய்வு நிகழ்ச்சி 

 கோவில்பட்டியில் ‘தேடல்’ புத்தகம் திறனாய்வு நிகழ்ச்சி 

Oplus_16908288

கோவில்பட்டியில் ‘இலக்கியச் சாரல்’ மற்றும் ‘சகாராவைத் தாண்டாத ஒட்டகம்’ கல்வி நிறுவனம் சார்பில், ராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய ‘தேடல்’ புத்தகத்தின் திறனாய்வு நிகழ்ச்சி நடந்தது.

​கோவில்பட்டி ​நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தியான பயிற்சி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் ப. ஜான் கணேஷ் தலைமை தாங்கினார். விஸ்வாஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ‘ஞான ஒளிமலர்’ இந்திராணி  மற்றும் எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி முதல்வர் ஆர். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி இசை எப்.எம்.இயக்குநர், முன்னாள் வேளாண்கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

​புத்தகத் திறனாய்வு

​நிகழ்ச்சியில் நூலினைப் பற்றிப் ,முருக சரஸ்வதி ராதா (தமிழாசிரியர்),கி. பிரபு (பள்ளி முதல்வர்),நல்லாசிரியர் ராஜசேகர் (தமிழாசிரியர்),கவிஞர் ஜெ. பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு, திறனாய்வு செய்து  பேசினர். 

​நிகழ்ச்சியின் இறுதியில், ‘தேடல்’ புத்தகத்தின் ஆசிரியர் ராஜேஷ் சங்கரப்பிள்ளை ஏற்புரையாற்றினார். வரகவி நல்லாசிரியர் மா. முருகேசன் நன்றி கூறினார். 

நிகழ்ச்சியில் கழுகுமலை திருவள்ளுவர் கழகத் தலைவர் பொன்ராஜ்பாண்டியன், செயலாளர் முருகன், கோவில்பட்டி கம்பன் கழகச் செயலர் சரவணச் செல்வன், தலைவர் முத்துப் பாண்டியன், சிறார் கலை இலக்கிய சங்க செயலாளர் மணிமொழி நங்கை, பொருளாளர் கண்ணகி, கவிஞர் போத்திராஜ், எழுத்தாளர் இராஜ லட்சுமி, திருவள்ளுவர் மன்றத்துணைத் தலைவர் திருமலை முத்துச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *