தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் , சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000/- வழங்குவதற்கான முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 2021-22ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர் விடுதிகளில் சிறந்த முறையில் பணியாற்றிய 3 காப்பாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இது வரை குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை, மற்றும் கஞ்சா, குட்கா, சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பார் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-குண்டர் தடுப்புச் சட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 38 எதிரிகள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 எதிரிகள் உட்பட 238 பேர் குண்டர் தடுப்புச் […]
தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூ 64,79,431/- மதிப்புள்ள 7 நான்கு சக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார், கொடியசைத்து தொடக்கி வைத்தார்.தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், தாளமுத்துநகர், சிப்காட், முத்தையாபுரம் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல் நிலைய ரோந்துப் பணிக்கு வழங்கினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி ஊரக […]
குழந்தைகள் தின விழா இன்று(நவம்பர் 14) கொண்டாடப்பட்டு வருகிறது, தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், மாற்றுத்திறனுடைய இளம் சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கிநார். மேலும் சிறார்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரோஜா பூக்களையும் வழங்கினர்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து மாற்றுத்திறனுடைய இளம் சிறார்களுக்காக கல்வி சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தைகலெக்டர் .செந்தில் ராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (9.11.2022) வெளியிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2023ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலின்படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 104416 ஆண் வாக்காளர்களும், 108932 பெண் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர். பக்தர்கள் மட்டுமல்லாமல், அர்ச்சகர்கள் உட்பட யாரும் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது . தடை உத்தரவை மீறி யாராவது செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து […]
எக்ஸ்ரேவின் தந்தை வில்ஹெல்ம் ரான்ட்ஜென் எக்ஸ்ரே கண்டுபிடித்த தினமான நவம்பர் 8-ம் தேதி சர்வதேச கதிரியக்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் நுண்கதிர் துறை தலைவர் டாக்டர் புளோரா நெல்சன் கேக் வெட்டினார், ]மருத்துவர்கள், நுண்கதிர்வீச்சாள பணியாளர்கள், நோயாளிகளுக்கு கேக் வழங்கி பேசினார்.டாக்டர் புளோரா நெல்சன் பேசுகையில் கூறியதாவது:-நவீன மருத்துவ முன்னேற்றத்துக்கு எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும். உலகமே கொரோனா தொற்றினால் பரிதவித்த […]
தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகைரச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் ஜோன்ஸ் என்பவருக்கு அவருடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்ட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய KYC Update செய்ய வேண்டும் என்று கூறி அவருடைய செல்போனுக்கு லிங்க்குடன் குறுஞ்செய்தி வந்துள்ளது.அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து ஜோன்ஸ் தன்னுடைய இன்டெர்நெட் பேங்கிங் பயனாளர் பெயர் (Username), கடவுச்சொல் (Password) மற்றும் OTP ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவருடைய வங்கிகணக்கில் இருந்து ரூ.1,24,500/- பணம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜோன்ஸ் National […]
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக சத்யா, துணைத்தலைவராக செல்வக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தனர்.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், துணைத்தலைவர் செல்வக்குமார் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் சில மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்ததையடுத்து அ.தி.மு.க. பலம் குறைந்தது.இதை தொடர்ந்து எதிர்க்கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் சத்யாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கிலும் தீர்வு […]
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இறக்குமதியாளர்கள் மூலம் டிப்பர் லாரிகளில் நிலக்கரி வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது,இதுபோல் பருப்பு உப்பு உள்ளிட்ட உணவு வகைகளும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான வேர் ஹவுஸ் குடோன்ககளுக்கு கொண்டு செல்லப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது,இந்நிலையில் துறைமுக இறக்குமதியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு தெரியாமல் சிலர் கூட்டாக நீண்ட காலமாக லாரிகள் மூலம் கடத்தல் பொருட்களையும் கொண்டு சென்று பதுக்கி வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாக துறைமுகத்தில் பணி செய்யும் ஊழியர்கள் புகார் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







