தூத்துக்குடி பீச் ரோட்டில் 30 அடி தூரம் உள்வாங்கிய கடல்
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமாட் 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமார் 460 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் இன்று (டிச.9) இரவு புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி பீச் ரோட்ட்டில் ரோச் பூங்கா, இனிகோ நகர் பகுதிகளில் இன்று காலை திடீரென 30 அடி தூரம் வரை கடல் உள் வாங்கியது. இதனால் கடலோரப் பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.
2004ம் ஆண்டு சுனாமிக்குப் பின் தமிழக கடல் பகுதிகளில் கடல் உள்வாங்குவது சாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எனினும், தற்போது மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில் தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







