தூத்துக்குடியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு; அமைச்சர் கீதாஜீவன் தொடக்கி வைத்தார்
![தூத்துக்குடியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு; அமைச்சர் கீதாஜீவன் தொடக்கி வைத்தார்](https://tn96news.com/wp-content/uploads/2022/12/ariviyalmanadu.jpg)
தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது, அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் 10 வயது முதல் 17 வயது வரை உள்ள பள்ளி குழந்தைகளிடையே உள்ள இயல்பான அறிவியல் ஆய்வு மனப்பான்மை வெளிக்கொணரும் விதமாக. ஒரு மைய கருப்பொருளை கொண்டு குழந்தைகள் மூன்று மாதங்களாக ஆய்வுகள் செய்து அதில் மாவட்ட அளவிலான மாநாடுகள், மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெற்று அதில் தேர்வான ஆய்வுகளில் 528 ஆய்வுக்குழுக்கள் இன்று இந்த மாநில மாநாட்டில் இரண்டு நாட்களில் சமர்ப்பிக்க உள்ளனர்.
இதிலிருந்து 30 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய அளவில் நடைபெறும் தேசிய குழந்தை அறிவியல் மாநாடு குஜராத்தில் பங்கு பெற உள்ளனர். இந்நிகழ்வின் துவக்கவிழாவானது இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில் ராஜ் தலைமையில் துவங்கியது. இவ்விழாவினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குறித்த அறிமுகத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்த அறிமுகத்தை தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுகுமாரன் ஆகியோர் பேசினர்.
தமிழ்நாடு அறிவில் இயக்க மாநில தலைவர் எஸ்.தினகரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.அண்ணாதுரை, வாழ்த்துரை வழங்கினர்.
விழாவின் வரவேற்பு குழு கவுரவத் தலைவர் சாந்தகுமாரி, வரவேற்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பேராசிரியர் செ.சுரேஷ்பாண்டி நன்றிகூறினார்.. இவ்விழாவினை தமிழ்நாடு அறிவில் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்து வழங்கினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)