தமிழ்நாடு சமூக தணிக்கை அலகின் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 443 மையங்களிலும்,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் 957 மையங்களிலும் மூன்று கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் புதூர் ஊராட்சி ஒன்றியம் முத்துசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த சமூக தணிக்கையின் போது மாணவர்களுக்கு கைகளை சோப்பு போட்டு கழுவும் முறை குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ,நலமுடன் வாழ 10 கட்டளைகள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளும்,சுகாதார கேள்விகளுக்கு பதில் […]
காேவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் இயற்பியல் துறை மகளிர் கழகம் மற்றும் ஆஸ்கார் நிறுவனம் சார்பாக “ஸ்டார்ட் அப் மற்றும் புதியதொழில் மாதிரிகள்” என்ற தலைப்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இயற்பியல் துறைத்தலைவரும் மகளிர்கழகப் பொறுப்பாளருமான பெ.சித்ரலேகா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் மூ.சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பேசினார். கோவில்பட்டி கேட்டலிஸ்ட் கான்ஸ்சப்ட் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.வினோத் “புத்தொழில் Spark 2026” என்ற தலைப்பில் ஸ்டார்ட் அப் பற்றியும், புதிய தொழில் […]
கோவில்பட்டி செ. சீ.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில்( எஸ். எஸ். டி. எம்.), தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பணிகளுக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் செயலாளர் செல்வம் கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் துணைத் தலைவர் ராஜவேல் மற்றும் துணை மேலாளர் […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), வணிக பகுப்பாய்வு துறை, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு, நிறுவனத்தின் புதுமை மன்றம் ஆகியவை இணைந்து கல்லூரியில் கருத்தரங்கு நடத்தின. “வளாகத்திலிருந்து வாழ்க்கை வரை… தொழில்முறை மனப்பான்மை” என்ற தலைப்பிலான இந்த கருத்தரங்கிற்கு துறைத் தலைவர் பா. கிருபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமையுரை ஆற்றினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர். பா. மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூரில் உள்ள விவேகானந்தா மேலாண்மை […]
கோவில்பட்டியில் மகாவிஷ்ணு பெருமாள் போற்றி ஸ்துதி பாமாலை நூல் வெளியீட்டு விழா தங்கமகால் மண்டபத்தில் நடந்தது.முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு ஆசி வழங்கினார். விஸ்வகர்மா நகை தொழிலாளர் சங்க தலைவர் கணேசன், பாஜக நிர்வாகிகள் பாலமுருகேசன், சீனிவாசன், பாலசுப்பிரமணியன், எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் மகாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நூல் ஆசிரியர் கவிதாகணேசன் நன்றி கூறினார்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் இன்று ( ஜனவரி 6)ஆய்வு மேற்கொண்டார். அவசர சிகிச்சை பிரிவு அதி நவீன சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஆகிய பகுதிகளை பார்வையிட்டு நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார். மேலும் வெளி நோயாளிகள் பிரிவு க்கு சென்று அங்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். மேலும் பாதம் பாதுகாப்பு மையம், பல் மருத்துவ […]
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வருகிற 9 ம்தேதி தமிழ்நாடு முழுவதும் திரையிட இருக்கிறார்கள். இந்த திரைப்படம் கோவில்பட்டியில் லட்சுமி, சத்யபாமா, சண்முகா ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மேற்படி திரைப்படத்திற்கான கட்டணம் திரையரங்கு உரிமையாளர்களால் பல மடங்கு அதிகமாக வசூக்கப்படலாமென தெரிகிறது அது பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் சிரமத்தை கொடுக்கும். எனவே மேற்கண்ட திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதிகமாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது உரிய […]
கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகில் ஆர்.சி. வணிகவளாகத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தபால் நிலைய டவுன் கிளை வங்கி உட்பட 6 க்கும் மேற்பட்ட முக்கிய வங்கிகளும் நேஷனல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட 4 க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இந்த டவுண் தபால் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றன, பல நூற்றுக்கணக்கானவர்கள் பலனடைந்து வரும் டவுண் தபால் நிலையத்தை தபால் துறை இடம் மாறுதல் செய்ய இருப்பதைக் கண்டித்து கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைமை தபால் நிலையத்தை […]
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட சுரைக்காய்ப்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி சந்தனவேல் வாழை தோட்டத்தில் மாணவர்கள் வாழைக் கன்று நேர்த்தி பற்றிய செயல்விளக்கத்தை கிராம விவசாயிகளுக்கு வழங்கினர். இந்த செயல் விளக்கத்தினை கிள்ளிகுளம் வ.உ.சி.வேளாண்மை கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களான ஹரிபிரகாஷ் , இர்ஷாத் அஹமது , இந்திரஜித் நாராயணன், கண்மணி செல்வம் , கிஷோர் மணிக்குமரன் , லோகேஷ்குமார் , மனோஜ்ராஜ் , மதன்குமார், மற்றும் மிர்துன் ஜெய் சௌகான் ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கினர் செயல்முறை: […]
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கோவில்பட்டியில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் முன்னிலையில்,மாவட்ட உதவி செயலாளர் பாபு, நகரக்குழு உறுப்பினர் முனியசாமி, இளைஞர் பெருமன்ற மாநில துணைத் தலைவர் ரஞ்சனி கண்ணம்மா உள்ளிட்டோர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு திரண்டனர். அவர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு பிரதான சாலையில் ஊர்வலமாக ரெயில் நிலையத்துக்கு சென்றனர். அவர்களை இளையரசனேந்தல் சாலை […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







