மகாவிஷ்ணு பெருமாள் போற்றி ஸ்துதி பாமாலை நூல் வெளியீட்டு விழா
கோவில்பட்டியில் மகாவிஷ்ணு பெருமாள் போற்றி ஸ்துதி பாமாலை நூல் வெளியீட்டு விழா தங்கமகால் மண்டபத்தில் நடந்தது.முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு ஆசி வழங்கினார். விஸ்வகர்மா நகை தொழிலாளர் சங்க தலைவர் கணேசன், பாஜக நிர்வாகிகள் பாலமுருகேசன், சீனிவாசன், பாலசுப்பிரமணியன், எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் மகாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நூல் ஆசிரியர் கவிதாகணேசன் நன்றி கூறினார்.







