கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கலெக்டர் இளம்பகவத் ஆய்வு
Oplus_16908288


கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் இன்று ( ஜனவரி 6)ஆய்வு மேற்கொண்டார்.
அவசர சிகிச்சை பிரிவு அதி நவீன சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஆகிய பகுதிகளை பார்வையிட்டு நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார்.

மேலும் வெளி நோயாளிகள் பிரிவு க்கு சென்று அங்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். மேலும் பாதம் பாதுகாப்பு மையம், பல் மருத்துவ பிரிவு, மக்களை தேடி மருத்துவம், ரத்த வங்கி, எலும்பு முறிவு,பொது மருத்துவம், கதிர் இயக்கப்பிரிவு டிஜிட்டல் எக்ஸ்ரே, சி டி ஸ்கேன், மெமோகிராம் பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதிதாக 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் ‘கிரிட்டிக்கல் கேர்’ வார்டு பகுதியை கலெக்டர் இளம் பகவத் பார்வையிட்டார்.

ஆசியா பார்ம்ஸ் நிறுவனம் மூலம் 50 ஆயிரம் ரூபாய் செலவில் லைட்டிங் போர்டு அமைக்கப்பட்டதற்கான நன்றி கடிதத்தை நிறுவன அதிகாரியிடம் கலெக்டர் இளம் பகவத் வழங்கினார்.
மேலும் அரசு மருத்துவமனைக்கு பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதி ஐ டி பி ஐ வங்கி மூலமாக 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் பெறப்பட்டன. அதற்கான நன்றி கடிதத்தை வங்கி அதிகாரிகளிடம் கலெக்டர் வழங்கினார்.
கலெக்டர் ஆய்வின் போது இணை இயக்குனர் ( நலப் பணிகள்) டாக்டர் பிரியதர்ஷினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் அனுஜா ஜஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.







