கோவில்பட்டி டவுண் தபால் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது;கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மனு

கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகில் ஆர்.சி. வணிகவளாகத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தபால் நிலைய டவுன் கிளை வங்கி உட்பட 6 க்கும் மேற்பட்ட முக்கிய வங்கிகளும் நேஷனல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட 4 க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இந்த டவுண் தபால் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றன,
பல நூற்றுக்கணக்கானவர்கள் பலனடைந்து வரும் டவுண் தபால் நிலையத்தை தபால் துறை இடம் மாறுதல் செய்ய இருப்பதைக் கண்டித்து கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைமை தபால் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமாரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்ட குழுவினரிடம் கூறினார்.

போராட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா மோகன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மகாராஜன், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமிமுருகன், காங்கிரஸ் கட்சி துரைராஜ், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார் ஜெகநாதன், தமிழ்நாடு காமராஜ் பேரவை நாஞ்சில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







