“ஜனநாயகன்” திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்; துணை வட்டாட்சியரிடம் மனு
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வருகிற 9 ம்தேதி தமிழ்நாடு முழுவதும் திரையிட இருக்கிறார்கள். இந்த திரைப்படம் கோவில்பட்டியில் லட்சுமி, சத்யபாமா, சண்முகா ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
மேற்படி திரைப்படத்திற்கான கட்டணம் திரையரங்கு உரிமையாளர்களால் பல மடங்கு அதிகமாக வசூக்கப்படலாமென தெரிகிறது அது பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் சிரமத்தை கொடுக்கும்.

எனவே மேற்கண்ட திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதிகமாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி துணை வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனு அளிக்கும் நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மகராஜன், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமிமுருகன், காங்கிரஸ் கட்சி துரைராஜ், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், ஜெகநாதன் திட்டங்குளம் வார்டு உறுப்பினர் தங்கபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







